விப்ர ஸம்மேளனம்

    ப்ராம்மணதர்மரக்ஷணத்தின் பொருட்டு இந்தமுயற்சி.ஒவ்வொரு ப்ராம்மண குடும்பத்திலும் உள்ள ஒவ்வொரு க்ருஹஸ்தனும் மேற்கூறும் விபரங்களை விப்ரஸம்மேளனம் என்ற அமைப்புக்கு அளித்து ப்ராம்மணதர்மங்களின் ஸ்வரூபத்தை உள்ளது உள்ளபடி அறிந்து நடைமுறைக்குக்கொண்டு வந்து உலகநலனுக்கு வழிவகுக்கவேண்டும் என்ற அவாவில் இம்முயற்சியை மேற்கொள்கிறோம்.தங்களது அபிப்ராயங்களை வரவேற்கிறோம்.   இந்த ஃபாரத்தை ப்ரிண்ட் அவுட் எடுத்து எங்களது விலாஸத்துக்கு அனுப்பவும்.

    ப்ராம்மண ஸமூஹம் தரவேண்டியவிபரங்கள்

(1)  சர்மா-

 
(2)  பெயர்-  
(3)  Address-  
(4)   Phone Number-  
(5)   Mobile Number-  
(6)   E Mail ID-  
(7)  கோத்ரம்-  

(8)  ஸூத்ரம்-

 

(9)  வேதசாகை-

 

(10) உட்பிரிவு-

 
(11) மாதாமஹ
கோத்ரம்-
 
(12) பத்னீ கோத்ரம்-  
(13) குழந்தைகள்
பெயர்விபரங்கள்-
 
(14) ஜன்மமாஸ
நக்ஷத்ரங்கள்-
 
(15) ஆத்து வாத்யார் பெயர்-  
(16)  Address-(17)  Phone Number-(18)  Mobile Number-(19)  E Mail ID-  

(20)  ஆத்து
வாத்யாரின்   அத்யயன
விபரங்கள்-

 
(21)  ஆத்து ச்ராத்த திதிகள்-  
(22)  ஒரு வருஷத்தில்
ஆத்தில்  நடத்தும்
 விசேஷங்கள்-
 
(23)  மேலும் தெரிவிக்க
விரும்பும்  விபரங்கள்
இருந்தால்-
 

(24)  எடுத்துக்கொள்ளவேண்டிய உறுதிமொழி விப்ரஸம்மேளனீ ஸபா வின் தர்ம்யமான கோட்பாடுகளை அனுஸரிக்கிறேன் என ஸ்ரீமஹா பெரியவாள் ஸன்னிதியில் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன்.

தேதி-

கையெழுத்து    

இந்தஃபாரத்தை அனுப்ப விலாஸம்---
A.Sundaresa Sarma
& Viprasammelanam
No.21/12, Pushya Mandapa Street
Tiruvaiyaru-613204. Phone-04362260434. Mobile-9486635006.
E Mail- saunakaassarma@gmail.com

 

 விப்ரஸம்மேளனத்தின் கட்டுப்பாடுகள்

(1)             ப்ராம்மண்யம் போய்விடும் கார்யங்களில் ஈடுபடாமல் இருப்பது.

(2)            கூடுமானவரை நித்யகர்மாக்களை விடாமல்செய்வது.

(3)            க்ருஹத்தில் இருக்கும்போது ஆசாரமாக இருப்பது

(4)           குழந்தைகளுக்கு ப்ராசீன ஆசார அனுஷ்டானங்களை போதிப்பது

(5)            குழந்தைகளையும் க்ருஹத்தில் இருக்கும்போது ஆசாரமாக இருக்க வைப்பது

(6)            ஆத்துப்ரத்யாப்தீகச்ராத்தங்களையும் மாஸிகங்களையும்  அன்னரூபமாகவே நடத்துவது

(7)            ஸ்ரீமத்ராமாயணம்போன்றஏதோ ஒரு புராணத்தை தினமும் அரைமணி நேரமாவது வாசிப்பது.

(8)          தமது க்ருஹங்களில் ஜபஹோமங்களை ஸம்மேளனீயில் தெரிவித்து வித்வான்களிடம் அங்கீகாரம் பெற்றுநடத்துவது.

(9)         அசாஸ்த்ரீயமாக எந்தகர்மாவையும் நடத்தாமல் இருப்பது.

(10)     ஒரு வாரம் முன்னதாகத்தெரிவித்து  வருஷத்தில்  ஒருநாளாவது ஸம்மேளனத்தின் த்யான மண்டபத்துக்கு வந்து ஸ்ரீமஹாபெரியவாளை த்யானித்து மௌனமாக 20 நிமிஷமாவது ப்ரார்த்தித்துச்செல்வது.

விப்ரஸம்மேளனத்தில் அன்வயம்பெற முடியாதவர்கள் 

(1)         ஸமானகோத்ரஸமானார்ஷேயவிவாஹம் செய்துகொண்டுள்ளவர்கள்.

(2)       ப்ராம்ஹணேதராளை விவாஹம் செய்துகொண்டுள்ளவர்கள்.

(3)       விவாஹரத்துசெய்தவர்களையோ பர்த்ருவியோகம் ஆனவர்களையோ  விவாஹம் செய்துகொண்டுள்ளவர்கள்.

(4)       இவைகளுக்குத்துணைபோகிறவர்கள்.

    இவர்கள் ப்ராம்மணதர்மங்களை அனுஸரிக்கும் தகுதியை இழந்துவிடுகிறார்கள்.
இவர்களுக்கு பகவன்னாமஸ்மரணத்தைத்தவிற வேறு வழி தெரியவில்லை. 

 விப்ரஸம்மேளத்தின்அபிப்ராயங்கள்

  (1) ப்ராம்மணஸமூஹம் சீரழியாமல் பாதுகாப்பது.

 (2) ப்ராம்மணஸமூஹத்தை ஒருமிக்கவைப்பது.

(3) நம் தேசத்தில் ப்ராம்மணதர்மத்தை வலுவடையச்  செய்வது.

(4)  உலகத்தில் யாவரையும் அவரவர் தர்மங்களில் நிலைபெறவைப்பது.

(5) அவரவர்களுக்கு அவரவர் தர்மங்களை    எடுத்துறைப்பது.    

(6) ப்ராம்மணஸமூஹத்தை க்ரந்தப்ரமாணம் பார்த்து அனுஷ்டானங்களை நடத்தச்செய்வது.

(7)   ப்ராம்மணக்ருஹங்களில் ஸ்த்ரீகள் பஹிஷ்டா     காலங்களில் 3 நாட்கள் ஒதுங்கி இருக்கும்படி ஏற்பாடுசெய்யச்சொல்வது.

(8) ஒவ்வொரு ப்ராம்மணக்ருஹத்திலும் பஞ்சாயதனபூஜை பண்ணச்சொல்வது.

(9)  உபநயனம் மற்றும் விவாஹங்களை அவச்யம் குறைந்தபக்ஷம் 3 நாள் தீக்ஷாக்ரமத்தில் நடத்தச்சொல்வது.

(10அபரகார்யங்களில் அவரவர் சக்திக்குத்தக்கபடி தானங்களை அவச்யம் பண்ணச்சொல்வது.

(11)புதுவீடு கட்டும்போது பூஜாரூம் கட்டுவதைப்போல் க்ருஹத்தில் ஹோமம் பண்ணுவத்ற்க்குத்தக்கபடி அவச்யம் ஒரு இடம் அமைக்கச்சொல்வது.     

(12)     ப்ராம்ஹணகுடும்பங்களில் க்ருஹஸ்தர்கள் காலைவேளையில் ப்ராதஸ்னானம் செய்து மடியாக ஒணத்தியுள்ள 9*5 வேஷ்டியை பஞ்சகச்சமாக கட்டிக்கொண்டு அவரவர் குலாசாரத்தின்படி பஸ்மாவோ அல்லது ஊர்த்வபுண்ட்ரமோ தரித்துக்கொண்டு ஸந்த்யை முதலியவற்றைச் செய்யச்சொல்வது.

(13)        குழந்தைகளைப்பக்கத்தில் வைத்துக்கொண்டு தினமும் கொஞ்சமாவது ஸ்ரீமத்ராமாயண பாராயம் பண்ணச் சொல்வது.

(14)விவாஹமான ஸ்த்ரீகள் போஜனம் வரையாவது அவரவர் குலாசாரத்தின்படி மடிசார்கச்சம் வைத்து புடவை கட்டிக்கொண்டிருக்கச்சொல்வது.

(15)        குழந்தைகளையும் பள்ளிக்கூடம் சென்றுவந்தவுடன் ஆத்தில்இருக்கும் போது நவீன ட்ரஸ்களை விலக்கி ப்ராசீனமாக புருஷக்குழந்தைகளை வேஷ்டிதுண்டும், பெண்குழந்தைகளை பாவாடை சித்தாடை கட்டிக்கொண்டிருக்கச் சொல்வது.

(16)  தினமும் ஔபாஸனம் பண்ணமுடியாதக்ருஹஸ்தர்களை அன்றாடம் ஹோமத்ரவ்யதானப்ரத்யாம்னாயமாக த்ரவ்யம் எடுத்துவைக்கச்சொல்வது.

(17)ஒரு வருஷத்துக்கு ஒருபக்ஷமாவது ஔபாஸனம் மற்றும் தர்சபூர்ணமாஸஸ்தாலீபாகங்களைப்பண்ணச் சொல்வது.தேவைப்பட்டால் ஏற்பாடு செய்துகொடுப்பது.

(18)        ப்ராம்மணஸமூஹத்தார்களிடம் அவரவர் செய்யும் ச்ராத்தங்கள் அந்தந்த திதிகளில் ஏற்பாடுசெய்து நடைபெறுகிறதா என ஒருவாரத்துக்கு முன் விஜாரிப்பது.

(19)        தேவைப்பட்டால் ஏற்பாடு செய்துகொடுப்பது.

(20)ஒவ்வொருவரும் ஸந்த்யா, ஸமிதாதானம், ஔபாஸனம், ப்ரம்மயக்ஞம், பஞ்சாயதன பூஜை, தர்ப்பணம், ச்ராத்தம்,அபரம் முதல்நாள் இரண்டாம்நாள்  ஆகியவற்றுக்குத்தேவையான வேத மந்த்ரங்களை அவச்யம் பிரித்துப்பிரித்து ஸ்வரத்துடன் நன்கு சொல்லும்படி தங்கள் அனுஷ்டானத்துக்கென அவச்யம் கற்றுக்கொள்ளச் சொல்வது.

(21)  ஒவ்வொருவர் க்ருஹத்திலும் அவரவர் வேதசாகை புஸ்தகத்தையும், அவரவர் ஸூதரானுஸாரியான ப்ரயோக புஸ்தகத்தையும் அவச்யம் வைத்துக்கொள்வச்சொல்வது.

(22) ஒவ்வொருவரையும் மாஸம் ஒருமுறையாவது    ஸஹஸ்ரகாயத்ரீ பண்ணச்சொல்வது.

(23)      புதிதாக வீடுகட்டும்போது  ஸ்த்ரீகள் பஹிஷ்டா     காலங்களில் 3 நாட்கள்          ஒதுங்கி    இருக்க  சௌகர்யமாக சௌசசாலையுடன் ஒரு ரூம்       கட்டச் சொல்வது.

(24)        ஸ்த்ரீகள் பஹிஷ்டா காலத்தில் குளிக்க கூடாது. தலைக்கு எண்ணை தடவிக் கொள்ளக் கூடாது. பல்லை ப்ரஷ் வகை வைத்து தேய்க்கக் கூடாது. நகம் கிள்ளக்கூடாது. எதையும் நறுக்கக்கூடாது. கயறு வகை பின்னக்கூடாது. 3 நாட்கள் ஒதுங்கி இருக்க வேண்டும். சமைக்கக் கூடாது.வாயகல பாத்ரத்தில்தான் ஜலம் குடிக்க வேண்டும். லகுவாக சாப்பிட்டு நியமத்துடன் இருக்க வேண்டும். இவ்விதம் இருப்பது என்பது நல்ல புத்ரர்கள் பிறக்க வழிவகுக்கும் ஆகியவிபரங்களை எடுத்துச்சொல்வது.

(25)      1900 வதுவருஷத்தில் போட்ட வைத்யனாததீக்ஷிதீய புஸ்தகத்தை உள்ளது உள்ளபடி ஸ்கேன் பண்ணி தர்மப்ரசாரம் பண்ணுவது.

விப்ரஸம்மேளனீ ஸபா தமது உறுப்பினர்களுக்கு செய்யும் ஸஹாயங்கள்-

(1)        ஒருவரது அப்ளிகேஷன் கிடைத்தவுடன் ஸபா பரிசீலித்து அவரை விப்ரஸம்மேளனீ ஸபா அங்கீகரித்ததற்கு அடையாளமாக கூடிய சீக்ரத்தில் மறுபடி அவரைத்தொடர்புகொண்டு அவரது தர்மவிச்வாஸத்தை உறுதிப்படுத்திக்கொண்டு அவருக்கு  நம்பர் கொடுத்து அட்டை ஒன்று அளிக்கப்படும்.

(2)        எப்போதும் அந்த நம்பரைக் குறிப்பிட்டு ஸபாவுடன் தொடர்பு கொள்ளவேண்டும்.

(3)         கொடுத்துள்ளவிபரத்தை அனுஸரித்து ஜன்ம நக்ஷத்ரங்களில் அவரவரது க்ஷேமங்களை ப்ரார்த்தித்து அக்னிஹோத்ரப்ரஸாதம் அனுப்பப்படும்.

(4)      குறிப்பிட்டு கேட்கப்படும் கோறிக்கைகள் நிறைவேற தகுந்த உபாயங்கள் அவரவ்ர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

(5)       அவரவர் க்ருஹத்து ச்ராத்ததினங்கள் அனேகமாக ஒருவாரம் முன்னதாக அவரவர்களுக்கு தபால் மூலம் ஞாபகப்படுத்தப்படும்.

(6)       அவரவர் க்ருஹத்து ச்ராத்தங்கள் யதோக்தமாக நடந்த விபரத்தை முடிந்தால் ஸபாவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தலாம்.

(7)       தர்ம ஸம்மந்தமான எந்தவிபரங்கள் தேவையானாலும் ஸபாவுக்கு எழுதிக்கேட்கலாம். கூடிய சீக்ரத்தில் தக்கபதில் அனுப்புவோம்.

(8)       அவரவர் க்ருஹத்து அனுஷ்டானங்களுக்கு தர்ம்யமாக வாத்யாருக்குத்துணையாக ஏதும் உதவி தேவையானால் தெரிவிக்கலாம்.

(9)       அவரவர் க்ருஹத்து வாத்யாருக்குத் துணையாக விவாஹ உபநயனங்களை சாஸ்த்ரீயமாகவே நடத்த வலியுறுத்திக் கூறி அதற்குத்தேவையான  முடிந்த உதவிகளைச் செய்வோம்.

(10)  தர்ம்யமான விஷயங்களில் உறுப்பினர் ஒருவர் பாதை மாறிச்சென்றாரானால் அவர் விஷயமாக ஸபா ஈடுபடுவதை நிறுத்திவிடும்.