News
31-8-2011

வெகு நாட்களுக்குப்பிறகு சந்திக்கிறோம். நாம் வெளியிட்டுக்கொண்டிருந்த  யக்ஞஸம்வர்த்தனீ எனும் இலவஸப்ரஸுரம் பலகாலமாக கிட்டத்தட்ட இரண்டுவருஷங்களாக வெளியிடமுடியவில்லை. காரணம் ப்ரிண்டிங் சிலவு போஸ்டேஜ் சிலவு என விலைவாசி ஏற்றத்தால் ஸமாளிக்கமுடியாததுதான் காரணம். வருஷத்துக்கு ரூ120 (நூற்று இருபது) இங்கு அனுஷ்டானங்களுக்கு உபகரிப்பவர்களுக்கு அவ்வப்போது ப்ரஸுரம் மற்றும் ப்ரஸாதம் அனுப்பிவந்தது. 750 பேர்களில் 75 பேர்கள் வரை மட்டுமே தொடர்ந்து அனுப்பினார்கள். நமது ஸமூஹத்தினரால்  பலபேர்கள் வருஷத்துக்கு ரூ120 என்பதை தொடர்ந்து அனுப்ப இயலவில்லை. ஒருதடவை ஒரு இஷ்யூ 1000 காபி ப்ரிண்ட் பண்ணி அனுப்ப 15000 ரூபாய் வரை சிலவாகிறது. அவர்களது த்ரவ்யத்தில் யத்கிஞ்சித் அனுஷ்டானத்துக்கு சேரவேண்டுமே. எல்லாமே லௌகிகமாக சிலவாகிவிடக்கூடாது என்ற எண்ணத்தால்தான் தொடர்ந்து ப்ரஸுரித்து அனுப்பமுடியவில்லை. தொடர்ந்து ஆதரித்துவருபவர்கள் தவறாக நினைக்கவேண்டாம்.  இதுவரை 61 இஷ்யூக்கள் வெளிவந்துள்ளது. மேலும் தொடர்ந்து தர்மப்ரசாரம் செய்ய ஆதரவு தேடி சீக்ரத்தில் தொடர்ந்து யக்ஞஸம்வர்த்தனீ ப்ரஸுரம் அனுப்ப முயலுகிறோம்.
தொடர்ந்து இங்கு தர்மங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ப்ராம்மணாஸமூஹம் தொடர்ந்து ஆதரிக்கவேணும்.