ஸம்ஸ்க்ருதபரிசயம்
 
முதல்பாடம்

        ஸம்ஸ்க்ருதபாஷையை ஒவ்வொருவரும் அவச்யம் கற்றுக்கொள்ளவேண்டும். இந்த பாஷை தேவபாஷை எனக்கூறப்படுகிறது.உலகத்தில் பல்லாயிரக்கணக்கான பாஷைகள் உள்ளன.உலகத்தில் உள்ள யாவரும் சேர்ந்து தேவலோகத்தோடு பேசவேண்டும் என்றால் எந்தபாஷையில் பேசுவது? எல்லாபாஷைகளும் தேவர்களுக்குப்புரியும்.ஆனால் எல்லாருக்கும் புரியாதே.அதற்காகத்தான் ஒரு பாஷையை சட்டதிட்டங்களுடன் அவரவர் விருப்பத்துக்கு மாற்றமுடியாதபடி ஸம்ஸ்க்ருதபாஷை அமைக்கப்பட்டுள்ளது.

        ஸம்ஸ்க்ருதபாஷைக்குப்போவதற்க்கு முன்னால் ஸம்ஸ்க்ருதலிபியை அவச்யம் ப்ராம்மணஸமூஹம் பரிசயம் பண்ணிக்கொள்ளவேண்டும்.அப்போதுதான் ஸம்ஸ்க்ருதபாஷையில் அமைந்துள்ள வேதங்கள் புராணங்கள் சாஸ்த்ரங்கள் ஆகியவைகளை படிக்கவும், ரஸிக்கவும், அனுபவத்துக்குக்கொண்டுவரவும் முடியும்.

        ஸம்ஸ்க்ருதபாஷைக்கு சரியான உச்சரிப்பு மிக அவச்யம். இல்லாவிட்டால் மாறுதலான அபிப்ராயங்களுக்கு வழிவகுத்ததாக ஆகிவிடும்.எல்லா பாஷையிலும் உச்சரிப்பு அவச்யம்தான் எனினும் ஸம்ஸ்க்ருதபாஷைக்கு ச்ற்று அதிக ப்ரயத்னம் எடுத்துக்கொள்ளவேண்டியுள்ளது.

        முதலில் அ ஆ இ ஈ உ ஊ என்ற  எழுத்துக்களை பார்ப்போம். இவற்றை தமிழில் உயிர் எழுத்துக்கள் எனக்கூறுகிறோம்.இவை தமிழில் 13   எழுத்துக்கள். ஸம்ஸ்க்ருதத்தில் இவற்றை  Ac>  (அச:) அச் எழுத்துக்கள் என்கிறோம். இவை 16  எழுத்துக்களாக உள்ளன. இந்த அச் எழுத்துக்களை உச்சரிக்கும் போது அடித்தொண்டையை ஸம்மந்தப்படுத்தி உச்சரிக்கவேண்டும்.அப்போதுதான் அந்த எழுத்து முழுமைபெறும்.

   ஆ      இ      ई            ஊஇந்த 6 எழுத்துக்களை எழுதியும் நன்கு உச்சரித்தும் பழகவேண்டும்.

 இரண்டாம் பாடம்

இனி அடுத்த 6 எழுத்துக்களைப் பார்ப்போம்.

 ऐ   ओe  औ  अंஅம்   अ>அஹ.

    ஸம்ஸ்க்ருதபாஷையில் எ ஒ ஆகிய இரண்டு குறில் எழுத்துக்களும் கிடையாது.இந்த  எழுத்துக்களை உச்சரிக்கும் போதும் அடித்தொண்டையை ஸம்மந்தப்படுத்தி உச்சரிக்க வேண்டும்.அப்போதுதான் அந்த எழுத்துக்களும் முழுமைபெறும்.  இந்த 6 எழுத்துக்களை எழுதியும் நன்கு உச்சரித்தும் பழகவேண்டும்.

மூன்றாம் பாடம்

        இது வரை அச் எழுத்துக்கள் எனப்படும் உயிர் எழுத்துக்களைக் கற்றுக்கொண்டோம்.இனி ஹல்  हल् எனப்படும் உயிர்மெய் எழுத்துக்களைப்பார்ப்போம். தமிழில் க ங ச ஞ முதல் ன வரை  உயிர்மெய் எழுத்துக்கள் 18 எனக்கணக்கிடப்பட்டுள்ளது. இவை ஸம்ஸ்க்ருதத்தில் 32 எனக்கூறப்பட்டுள்ளன.அதாவது க ச ட த ப எனும்  5 எழுத்துக்கள் ஒவ்வொன்றும் 4 விதங்களாக உள்ளன.  தமிழில் இந்த எழுத்துக்கள் வழக்கத்தில் மறைந்துவிட்டன. அவையாவன--
       
     च

     ट         

     प
        क க முதல் க வரையான 4 எழுத்துக்களை அடித்தொண்டையில் உச்சரிக்கவேண்டும். க என்ற எழுத்தை கணக்கு என்ற சொல்லில் உச்சரிக்கப்படும் க போன்று உச்சரிக்கவேண்டும்.    
        ख
என்ற எழுத்தை அடித்தொண்டையில் அழுத்தி உச்சரிக்கவேண்டும். அதாவது க்ஹ என்ற இருஎழுத்துக்களையும் இணைத்து  அடித்தொண்டையில் அழுத்தி உச்சரித்தால் எப்படி சொல்வோமோ அப்படிச் சொல்லவேண்டும்.

        ग என்ற எழுத்தை மேல்தொண்டையில் துர்கா என்ற சொல்லில் உச்சரிக்கப்படும் க போன்று உச்சரிக்கவேண்டும்.   க என்ற எழுத்தை மேல்தொண்டையில் அழுத்தி உச்சரிக்கவேண்டும். அதாவது க்ஹ என்பதை மேல்தொண்டையில் அழுத்தி உச்சரித்தால் எப்படி சொல்வோமோ அப்படிச் சொல்லவேண்டும்.  ங எனும் எழுத்து நன்கு வழக்கில் உள்ளது. இந்த 5 எழுத்துக்களை எழுதியும் நன்கு உச்சரித்தும் பழகவேண்டும்

மேலும்