தர்மங்களை அறிந்துகொள்வோம்
12-1-2011

 நாம் அவச்யம் கடைபிடிக்கவேண்டிய அடிப்படையான சிலவற்றை  ஞாபகப்படுத்திக்கொள்வோம்.
எந்தவிஷயத்துக்கும் பொய்யே சொல்லக்கூடாது.  பொய் என்பது நாம் செய்யும் தர்மங்களை அழித்துவிடும்.
மற்றவர்களுக்கு இடையூறான எதையும் செய்யக்கூடாது.  பொதுவாக நமது வண்டியை ஒரு இடத்தில் நிறுத்தும்போது அங்குள்ளவீட்டிற்கோ வ்யாபாரஸ்தலத்துக்கோ மக்களுக்கோ இடையூறு ஏற்படாமல் இருக்குமா என யோஜித்து நிறுத்தவேண்டும். இது ஒரு உதாஹரணம்.
நம்மை சத்ருவாக பாவித்து நமக்கு இடையூறு செய்யும் யாரையும் நாம் சத்ருவாக பாவித்து அவர்களுக்கு பாதகத்தை (அழிவை) ச்செய்துவிடக்கூடாது. நம்மை அவர்கள் சத்ருவாக பாவிப்பதற்குக்காரணமான பாபத்தைப்போக்கிக்
கொள்ளத்தான் நாம் முயற்சி எடுத்துக்கொள்ளவேண்டும்.

ப்ராம்மணக்ருஹங்களில் படுக்கை அறையில் படுக்கை போட்டபடியே இருக்கக்கூடாது. அன்றாடம் படுக்கையை மடித்துவைக்கவேண்டும். படுத்துக்கொண்ட இடத்தை பெறுக்கி ஜலம் தெளித்து துடைத்தபின் தான் உபயோகப்படுத்தவேண்டும்.  அதுதான் க்ருஹத்துக்கு மங்களத்தைக்கொடுக்கும்.  அன்றாடம் தூக்கம் என்பதை தைனந்தினிகப்ரளயம் என்பர்.  நாம் அன்றாடம் மரித்து எழுந்திருப்பதுபோல்தான்.